பிரிட்டிஷ் காலத்தில் இருந்த ஜனநாயகம் கூட தற்போது; திருச்சியில் விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்

By Velmurugan sFirst Published Aug 3, 2023, 5:48 PM IST
Highlights

பிரிட்டிஷ் காலத்தில் இருந்த ஜனநாயகம் கூட தற்போது இல்லை என்று குற்றம் சாட்டிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு வாயில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை கடந்த ஏழு நாட்களாக நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களுடைய கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் சூழ ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்திற்கு பின்னர்  செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநிலத் தலைவர் அய்யாகண்ணு, கடந்த பத்து ஆண்டுகளில் 5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.  காரணம் லாபகரமான விலை தராதது தான். தக்காளி விலை குறைவாக விற்றபோது கோல்டு ஸ்டோரேஜ் கட்டி வைத்தால் ஆறு மாதம் கழித்து கூட எடுத்து பயன்படுத்தலாம் என தெரிவித்தோம். ஆனால் இந்த அரசு எங்களை பிச்சைக்காரர்களை பார்ப்பது போலவும், அடிமை போலவும் பார்க்கிறது. 

சிறையில் இருக்க வேண்டிய ரகுபதி, சிறைத்துறை அமைச்சராக இருப்பது வேதனை அளிக்கிறது - அண்ணாமலை விமர்சனம்

தேவை இல்லாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது உற்பத்தி செய்கிற எங்களுக்கும் நஷ்டம், வியாபாரிகளுக்கும் நஷ்டம். எங்களுக்கு உதவி செய்ய மத்திய சர்க்கார் இல்லை. மாநில அரசும் குடோன் கட்டி தரவில்லை. இறுதி கட்டமாக நாங்கள் மருந்து குடித்து சாகலாம் என நினைக்கிறோம். இல்லை என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.

15,000 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்; இளைஞர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

click me!