திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் தினமும் பைக் ரேசில் ஈடுபட்டு வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்னரே காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் தினமும் இளைஞர்கள் சிலர் உயர் ரக இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்கிறார்கள். விலை உயர்ந்த பைக்கை ஓட்டும் அந்த இளைஞர் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் தன்னுடன் மேலும் 2 இளைஞர்களை முன்னும், பின்னுமாக அமர வைத்துக்கொண்டு பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் வாகனங்கள் அதிக அளவு செல்லும் பகுதியில் இது போன்று அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதுமலையில் புலி தாக்கியதில் பெண் பலி
undefined
பேருந்துக்காக இளம் பெண்கள் நிற்பதை பார்த்தால் அவர்களை பார்த்து பிளையங் கிஸ் கொடுத்தவாறு மேலும் வேகத்தை கூட்டி சாலையில் செல்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனதை்தை ஓட்டுகிறார்கள். இந்த சாகச நிகழ்ச்சி ஒருநாள் இரண்டு நாள் மட்டுமல்ல தினமும் நடைபெறுகிறது. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுகிறார்கள். இவர்கள் சாகசம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டால் இவர்கள் மட்டுமல்லாது ஒன்றும் அறியாத அப்பாவி மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும்.
குடிநீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்; 9 நாட்களாக அதே நீரை குடித்த மக்கள்
வழக்கமாக தங்களுக்காக ஒரு பகுதியை பிடித்துக் கொள்ளும் போக்குவரத்து காவல் துறையினர் தினமும் அதே பகுதியில் நின்று வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்கை மாற்றிவிட்டு அவ்வபோது குற்றப்பிரிவு காவல் துறையினரை போன்று போக்குவரத்து காவல் துறையினரும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு சட்ட விரோதமாக பந்தயம் நடத்தும் வாகன ஓட்டிகள், விதி மீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் குறையும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.