திருச்சியில் மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி குமரன் நகர் பிரதான சாலையில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் செவிலியராக திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை சாந்தாபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்பவரது மகள் நிவேதாலட்சுமி (வயது 20) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் காலையில் வழக்கம் போல பணிக்கு வந்த அவர் மாலை பணியிலிருந்த போது மருத்துவமனையின் 5வது மாடிக்கு சென்று திடீரென அங்கிருந்து குதித்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அதே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாத உயிரிழந்தார்.
வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் கைது.. மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்ட தமிழ்நாடு போலீஸ்!
செவிலியலு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அரசு மருத்துவமனை காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து நிவேதா லட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.