ரயில்வே டிக்கெட் பரிசோதகரை தாக்கிய தலைமைச் செயலக ஊழியரிடம் விசாரணை

By Velmurugan s  |  First Published Mar 6, 2023, 2:35 PM IST

ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் பணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகரைத் தாக்கியதாக தலைமைச் செயலக ஊழியரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருச்சிகல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தகுமார்(வயது 35). இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் 'சேது' அதிவிரைவு ரயிலில், திருச்சியில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில்  அரவிந்த் குமார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்த ரயிலில் பணி செய்து வந்தார்.

இந்த இரயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் போது டிக்கெட் பரிசோதகர் அரவிந்துக்கும் பயணி ஒருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அந்த பயணி சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

பெரம்பலூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; ஆட்டோ ஓட்டுநர் கைது

தலைமைச் செயலக ஊழியர் ராமேஸ்வரத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு இரயிலில் பணிக்கு திரும்புகையில் பரிசோதகருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் டிக்கெட் பரிசோதகரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார் தன்னை பயணி ஒருவர் குடிபோதையில் தாக்கிவிட்டதாக விழுப்புரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

பெண்களின் சபரிமலை; மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கொடியேற்றம்

அதனைத் தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக,  இரயில்வே பாதுகாப்பு படை படையினர் திருச்சிக்கு அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் எஸ் ஆர் எம் யூ தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன்பு கிரிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் பாக்கியவர் மீதும் தாக்கிய வரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தாக்கியதாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!