திருச்சி அருகே பிறந்து சில மணி நேரங்களேயான பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள புள்ளம்பாடி அருகே கல்லகம் கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் குழந்தையின் அழுகுறல் கேட்டு குப்பை தொட்டியில் எட்டி பார்த்த போது அதில் பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தை அழுது கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்ற இரக்கமற்ற கொடூர மனிதர்களை நினைத்து வேதனையுற்றனர். இது தொடர்பாக கல்லக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் காவல் துறை உதவியுடன் கிராம மக்கள் குழந்தையை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லால்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தையின் தொப்புள் கொடியினை அகற்றி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
undefined
கொலையில் முடிந்த பெண்களின் குழாயடி சண்டை; ஒருவர் கைது
இச்சம்பம் குறித்து கல்லக்குடி காவல் துறையினர் குப்பைத் தொட்டியில் வீசி சென்ற குழந்தை யாருடையது, யார் வீசி சென்றனர். தவறான வழியில் பிறந்த குழந்தையா, பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றனரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்து தகராறில் ஒன்றரை வயது குழந்தை அடித்து கொலை; தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை