காவலர்களை தாக்க நினைப்பவர்களுக்கு திருச்சி துப்பாக்கிச்சூடு ஒரு பாடம்; ஆணையர் எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Feb 20, 2023, 7:44 PM IST

விசாரணையின்போது காவலர்களை தாக்க முயற்சிக்கும் நபர்களுக்கு திருச்சி துப்பாக்கிகச் சூடு சம்பவம் ஒரு பாடமாக இருக்கட்டும் என்று மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திருச்சியில் இரண்டு ரௌடிகள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அவர்கள் பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்தில்  திருச்சி மாநகர  காவல்துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். இந்நிலையில்  திருச்சியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்காக  கைது செய்து குற்றவாளிகளை காவல் துறையினர் அழைத்துச் செல்லும் பொழுது காவலர்களை தாக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை.

Tap to resize

Latest Videos

undefined

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. குற்றவாளிகள் திருடிய நகைகளை மறைத்து வைத்திருந்த இடத்தில் அதனை மீட்பதற்காக வந்த பொழுது குற்றவாளிகள் காவல் துறையினரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது போன்ற பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கும் குற்றவாளிகளை கைது செய்து வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் காவல் துறையினரும் தீவிரமாக புலன் விசாரணை செய்கிறார்கள். 

பணியில் இருந்த பெண் ரயில்வே ஊழியர் கற்பழிக்க முயற்சி; கேரளா வாலிபர் அதிரடி கைது

ஆனால் தங்களது உயிருக்கு தற்காப்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களை சுட வேண்டிய சூழல் காவல் துறையினருக்கும் உருவாகிறது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து கைதாகும் குற்றவாளிகளின் மீது இது போன்ற நடவடிக்கை இருக்குமா என்கிற கேள்விக்கு? இது  அவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

காவல்துறையினருக்கு போக்கு காட்டி தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைது

இதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை சந்தித்து நலம் விசாரித்தார் அதனை தொடர்ந்து மருத்துவரிடம் காவலர்களின் நிலை குறித்து விசாரித்தார்.

click me!