வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராஜஸ்தான் சென்ற தமிழக காவல்துறையினரை பொய் புகார் அளித்து ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு அதிகரிகளிடம் சிக்கவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்கில் ஈடுபட்ட ரத்தன், சங்கர்ராம், பிரசாத், ராமர் உள்ளிட்ட நான்கு பேரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 10 வழக்குகளில் கொள்ளை போன நகைகளை ராஜஸ்தானில் விற்றதாக இவர்கள் தெரிவித்ததை அடுத்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளர் சியாமளாதேவி ரத்தன், சங்கர் இருவரையும் காவலில் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருடன் கண்டோன்மெண்ட் காவல் நிலைய உதவி ஆணையர் கென்னடி தலைமையில் உறையூர் காவல் ஆய்வாளர் மோகன், உதவி ஆய்வாளர் உமாசங்கரி உட்பட 15 பேர் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர். ராஜஸ்தானில் 254 சவரன் நகையில் 37 சவரன் மற்றும் 2 லட்சம் பணத்தை ராஜஸ்தானிலிருந்து மீட்டு விமான நிலையம் திரும்பியுள்ளனர்.
undefined
அப்போபோது மீதமுள்ள நகைகளுக்கு பதிலாக 25 லட்சம் பணம் தருவதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தமிழக காவலர்கள் லஞ்சம் பெறுவதாக பொய் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர். கொள்ளையர்கள் தெரிவித்த தகவலின் படி ராஜஸ்தான் சென்ற தமிழக காவல் துறையினரை மாநில லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
நாட்டிலேயே மத பிரச்சினை இல்லாத மாநிலங்களாக தமிழகம், கேரளா உள்ளது - பினராயி பெருமிதம்
அவர்களிடம் கொள்ளையர்கள் குறித்து உரிய ஆவணங்களை கொடுத்த பின்னர் அவர்கள் ஒப்புதலோடு கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு திருச்சி காவல்துறையினர் தமிழ்நாடு திரும்புகின்றனர்.
போதை தலைக்கேறி மின் கம்பியை பிடித்த நபர் உடல் கருகி உயிரிழப்பு
திருச்சி மாநகர் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் தேவைப்படுகின்றன. கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்களை தேர்வு செய்துள்ளோம். இதற்காக அந்தந்த பகுதியை சேர்ந்த குடியிருப்போர் சங்கங்களை ஒருங்கிணைத்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.