6000 கிலோ மட்டன், 4000 கிலோ சிக்கனுடன் தடல் புடலாக தயாராகும் அசைவ விருந்து; திமுக கூட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

By Velmurugan s  |  First Published Jul 26, 2023, 3:31 PM IST

திருச்சியில் நடைபெறும் திமுக பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக 6 ஆயிரம் கிலோ மட்டன், 4 ஆயிரம் கிலோ சிக்கன் பயன்படுத்தப்பட்டு நிர்வாகிகளுக்கு தடல் புடலாக விருந்து வழங்கப்படுகிறது.


நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும் இந்த தேர்தலை கடும் சவால்களுடன் எதிர்கொள்ள தயாராகி வருகின்றது. இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வரும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார். 

Latest Videos

undefined

அதன் ஒரு பகுதியாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மாநிலம் முழுவதும் தி.மு.க. 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் திருச்சியில் முதன் முறையாக நடத்தப்படுகிறது. 

மீண்டும் மோடி பிரதமரானால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் - சீமான் கருத்து

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த முதல்வருக்கு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். 

டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மத்திய தஞ்சை தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறைக்கூட்டம் இன்று திருச்சி ராம்ஜி நகர் அருகே நடைபெற்று வருகிறது.

திருச்சி அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் 

திருச்சி ராம்ஜிநகர் பரமேஸ்வரி மில் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்த 15 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

இதற்காக 5000 கிலோ அரிசி 6000 ஆயிரம் கிலோ மட்டன், 4 ஆயிரம் கிலோ சிக்கன் 65 வறுவல், முட்டை சாதம் என பிரம்மாண்டமான பந்தலில் அறுசுவை சாப்பாடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

click me!