திருச்சி அருகே பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் கைது; உஷார் நிலையில் காவல் துறை

By Velmurugan sFirst Published Jul 25, 2023, 11:55 AM IST
Highlights

திருச்சி மாவட்ட எல்லையில் காவல் துறையினர் மேற்கொண்ட வாகன தணிக்கையில் அரிவாள், பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த 5 நபர்களை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை.

திருச்சி மாவட்டம், முழுவதும் காவல் துறையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 5 பேரிடம் விசாரணை செய்த பொழுது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆட்டோவில் சோதனை மேற்கொண்டனர். அதில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்ட காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

"மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?" மேடையிலேயே திமுக பெண் சேர்மனுக்கு நடந்த கொடுமை!

இது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் அரிவாள் மற்றும்  பட்டாக்கத்தியை பறிமுதல் செய்ததுடன் ஆட்டோவில் பயணம் செய்த 5 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் யாருக்காக கூலிப்படையாக செயல்படுகிறார்கள்? மேலும், ஆயுதங்களை எதற்காக எடுத்துச் சென்றார்கள்? என்ன சதி செயலில் ஈடுபட சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணிப்பூர் போன்ற நிலை தமிழகத்திற்கும் வரும்; தொல்.திருமாவளவன் எச்சரிக்கை

click me!