விபசார வழக்கை சாதகமாக முடித்துத் தர ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் எஸ்.ஐ. கைது

By Velmurugan sFirst Published Jul 17, 2023, 4:54 PM IST
Highlights

திருச்சியில் விபசார வழக்கை சாதகமாக முடித்துத்தர லஞ்சம் பெற்ற பெண் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத், மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபசார தடுப்பு பிரிவு காவல் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அஜிதாவின் மீதான அந்த வழக்கு தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தருவதற்காகவும், மேலும் குண்டாஸ் வழக்குபதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருப்பதற்காகவும் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக உதவி ஆய்வாளர் ரமா கேட்டுள்ளார். இறுதியாக 3 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று உதவி ஆய்வாளர் ரமா கராராக இருந்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

மதுரை பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் பழிக்கு பழியாக வெட்டி படுகொலை

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினர் ஆலோசனையின் அடிப்படையில். அஜிதாவிடம் இருந்து உதவி ஆய்வாளர் ரமா இன்று ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். ரமா விபசார தடுப்பு பிரிவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று கூறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் முத்துசாமி

click me!