தமிழ்நாட்டை தலைசிறந்த நாடாக மாற்றியவர் காமராஜர் : அமைச்சர் நேரு பெருமிதம்!!

By Velmurugan sFirst Published Jul 15, 2023, 3:09 PM IST
Highlights

கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்பதை அறிந்த காமராஜர் பட்டித் தொட்டி எங்கும் பள்ளிகளை திறந்தார் என்று திருச்சியில் மறைந்த முதல்வர் காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் நேரு கூறினார்.

காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வரான காமராஜ் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. காமராஜர் முதலமைச்சரானதும் ஜாதி, மதம் வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வி கொடுத்தார். அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி இலவசமாக வழங்கினார். சுமார் ஆறாயிரம் கிராமங்களில் பள்ளிகள் இல்லை என்பதை அறிந்து உடனடியாக பள்ளிகள் இல்லாத ஊர்களில் பட்டித் தொட்டி எங்கும் பள்ளிகளை திறந்தார். 

ஒரு நாள் அரசு முறை பயணமாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, சிறுவன் ஒருவன்  மாடு மேய்த்துக் கொண்டிருந்ததை பார்த்தார். உடனே, காரில் இருந்து இறங்கி,  சிறுவனிடம், பள்ளிக்கு செல்ல வில்லையா என்று கேட்டார். சாப்பாடு தருவீங்களா? என்ற பையனின் எதிர்கேள்வியை மனதில் வாங்கிக் கொண்டார். உடனே சென்னை திரும்பிய அவர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். அதுதான் இலவச மதிய உணவுத் திட்டம். மதிய உணவுத் திட்டம் பள்ளிகளில் கொண்டு வந்த பின்னர் கல்வி  இடைநிற்றல் குறைந்தது. கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழகத்தில் கல்வியில் புரட்சி செய்த கர்மவீரர் காமராஜரின் அரும் பணி காலத்தால் அழிக்கக் முடியாதது. இப்படிப்பட்ட மாபெரும் தலைவர் காமராஜ் அவர்களின் 121 வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதிநவீன ரயில் பெட்டிகளுடன் ஊட்டி மலை ரயில்; மத்திய இணை அமைச்சர் எல். முருகன் துவக்கி வைப்பு!!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.  

இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் நேரு, ''தலைசிறந்த தலைவர் காமராஜ் அவரின் புகழ் காலம் உள்ளவரை போற்றப்படும். காமராஜ் என்ற பெயரை உச்சரிக்காமல் தமிழ்நாடு சென்று விட முடியாது. கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் காமராஜ், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரை  உச்சரித்தால் மட்டுமே வாக்குகள் கிடைக்கும். தமிழ்நாட்டை தலைசிறந்த நாடாக மாற்றிய பெருமை காமராஜரையே சாரும்.  

திருச்சி பேருந்து நிலையத்தில் சாமானிய பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண் போலீஸ்

தொடர்ந்து, இந்திய நாடார் பேரவை, வணிகர்கள் சங்கம் பேரவை, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காமராஜ்   சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

click me!