தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வறுமை காரணமாக பெற்ற 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற தாய், பாட்டி, இடைத்தரகர்கள் என 4 பேரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலைவாணர், மாரீஸ்வரி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கலைவாணர் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
பருப்பு வடைக்குள் இருந்த சுண்டெலி; வாடிக்கையாளர் அதிர்ச்சி
undefined
மாரீஸ்வரி தனது குழந்தையுடன், தாயார் அய்யம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் மிகுந்த வறுமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தையை விற்பனை செய்யும் இடைத்தரகர்களான சூரம்மாள், மாரியப்பன் ஆகியோர் மாரீஸ்வரி, அய்யமாளை தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகளைக் கூறி குழந்தையை விற்றால் ரூ.50 ஆயிரம் பெற்றுத் தருவதாகக் கூறி மாரீஸ்வரியிடம் சம்மதம் பெற்றனர்.
உச்சநீதிமன்றத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு
இந்நிலையில் பாளையங்கோட்டை சாலையில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே குழந்தை ஒன்று சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாரீஸ்வரி, அய்யம்மாள், சூரம்மாள், மாரியப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.