குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

By vinoth kumar  |  First Published Oct 29, 2022, 12:39 PM IST

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா.


திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா. கடந்த 25ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து, தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடந்து வருகின்றன. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெறுகிறது. அதேபோல், நாளை தேவர் ஜெயந்தியும் கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

இதையும் படிங்க;- ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு... தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஆட்சியர் அறிவிப்பு!!

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு;- தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழா மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நாளை அனைத்து அரசு மதுபான கடைகள் / மதுபான கூடங்கள்  அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். 

அன்றைய தினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- தமிழகத்தில் உள்ள கோயில்களின் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

click me!