நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள், ஒரு வயது குழந்தை என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரி - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள், ஒரு வயது குழந்தை என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 15 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. அடேங்கப்பா இவ்வளவு சிறப்பு அம்சம் இருக்கா!