தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும்போது நடிகர் டி. ராஜேந்தர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கியது. வட தமிழகம் தென் தமிழகம் என எந்த பாரபட்சமும் இல்லாமல் கொட்டித் தீர்த்தது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட வடமாவட்டங்களில் கனமழை பொளந்துக்கட்டியது. இதனால் வடமாவட்டங்கள் வெள்ளக்காடானது.
தென் மாவட்டங்களில் தீவிரத்தை காட்டியது வடகிழக்கு பருவமழை. கடந்த 17, 18, 19 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்தில் சுமார் 96 சென்டி மீட்டருக்கு மேல் கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழக அரசு மற்றும் பலரும் நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் அடைந்தார் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர். பிறகு அவரை அருகே இருந்த இருக்கையில் அமர வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..