தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே வையகவுண்டர்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி முத்துராஜ். இவருடைய மகன் பால் முத்துபிரபு (39). இவர் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது லாரியும்- காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே வையகவுண்டர்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி முத்துராஜ். இவருடைய மகன் பால் முத்துபிரபு (39). இவர் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது தங்கை சற்குணலில்லி (37). இவர்கள் குழந்தைகளுக்கு திருச்செந்தூர் கோவிலில் முடிகாணிக்கை செலுத்திவிட்டு குடும்பத்துடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை பால் முத்துபிரபு ஓட்டினார்.
இதையும் படிங்க;- சென்னையில் பயங்கரம்.. திடீரென ரயில் முன் பாய்ந்த பெண் வழக்கறிஞர்.. அலறி அடித்து ஓடிய பயணிகள்..!
கார் திருச்செந்தூர் அடுத்த பழையக்காயல் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி காரின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பால் முத்துபிரபு, அவருடைய தங்கை சுதா சற்குணலில்லியின் மாமியாரான தமிழ்செல்வி (63) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 6 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! டாஸ்மாக்கை மூடும் நேரத்தில் மாற்றமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!