வெடிகுண்டு வீசி காவலர் படுகொலை சம்பவம்... வீச்சரிவாளுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட ரவுடியின் உடல்..!

Published : Aug 20, 2020, 05:41 PM IST
வெடிகுண்டு வீசி காவலர் படுகொலை சம்பவம்... வீச்சரிவாளுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட ரவுடியின் உடல்..!

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி துரைமுத்துவின் உடலை வீச்சரிவாளுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி துரைமுத்துவின் உடலை வீச்சரிவாளுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்துவை பிடிக்கும் முயற்சியில், அவர் வீசிய நாட்டுவெடிகுண்டு வெடித்து சிறப்பு காவலர் சுப்பிரமணியன் வீர மரணமடைந்தார். மற்றொரு குண்டை வீச முயன்றபோது அது கையிலேயே வெடித்து படுகாயமடைந்த ரவுடி துரைமுத்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது கூட்டாளிகள் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரவுடி துரைமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, துரைமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான வெல்லூரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, துரைமுத்து உடல் மீது நீளமான வீச்சரிவாளையும் வைத்து உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!