நாட்டிற்கே பேரிழப்பு.. 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு.. ஸ்டெர்லைட்டின் சட்டப்போராட்டம் தொடரும்..!

By vinoth kumar  |  First Published Aug 18, 2020, 5:22 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை சார்ந்திருந்த 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார். 


ஸ்டெர்லைட் ஆலையை சார்ந்திருந்த 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு விதித்த உத்தரவுக்கு எதிராக ஆலை நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவில், ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

Latest Videos

undefined

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் குமார் மற்றும் துணை தலைவர் தனவேல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. சட்டப்போராட்டத்தை தொடருவோம். உறுதுணையாக இருப்போர் அனைவருக்கும் நன்றி. 25 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி ஸ்டெர்லைட் இயங்கி வந்திருக்கிறது. ஆலை வலுவான காரணங்கள் இன்றி மூடப்பட்டதை மற்ற முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். ஆலை மூடப்பட்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்ட வர்த்தகத்தில் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தாமிர ஆலை மூடப்பட்டிருப்பது நாட்டிற்கே பேரிழப்பாகும். ஆலை மூடப்பட்டிருப்பதால் அதிகளவில் தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. அரசியல் காரணங்கள் உள்ளதா? இல்லையா? என்பதை விட நீதித்துறையை நம்பி சட்டப்போராட்டத்தை தொடர்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டை சார்ந்த பலருக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சார்ந்திருந்த 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரத்தை இறக்குமதி செய்வது நாட்டிற்கே பெரிய இழப்பு. தீர்ப்பின் முழு விவரம் தெரிந்தபின் சட்டபூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

click me!