தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனா பாதித்த முதியவர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற MLA உள்ளிட்ட 400 பேர்.!

Published : Jul 14, 2020, 08:43 PM IST
தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்.. கொரோனா பாதித்த முதியவர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற MLA உள்ளிட்ட 400 பேர்.!

சுருக்கம்

தூத்துக்குடியில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் இறுதிசடங்கில் எம்எல்ஏ உள்ளிட்ட 400 பேர் பங்கேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் இறுதிசடங்கில் எம்எல்ஏ உள்ளிட்ட 400 பேர் பங்கேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவை சேர்ந்த 81 வயது முதியவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து,  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்குள் அவர் திடீரென இறந்துவிட்டார். 

இதனையடுத்து, மருத்துவர்களிடம் தகராறு செய்து முதியவர் உடலை உறவினர்கள் எடுத்து சென்றுவிட்டனர். பின்னர், வீட்டில் வைக்கப்பட்டிருந்த முதியவர் உடலுக்கு இன்று காலையில் தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில், முதியவருக்கான கொரோனா பரிசோதனை முடிவு இன்று காலை வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடலை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்குள் உடலை இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றுவிட்டனர். இறுதி சடங்கில் திமுக எம்எல்ஏ  உள்ளிட்ட சுமார் 400 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனால், தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சேலத்தில் இதுபோன்று இறுதி சடங்கில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!