கோவில்பட்டியில் அதிர்ச்சி... தனியார் ஆலையில் 57 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று..!

By vinoth kumar  |  First Published Jul 22, 2020, 12:31 PM IST

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மில்லில் 56 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மில்லில் 56 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ராயல் மில் நூற்பாலையில் சுமார் 286 பேர் வேலை செய்து வருகின்றனர். இதில், 286 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோவில்பட்டி அம்மா உணவகத்தில் 3 பேருக்கும், சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கும் என மொத்தம் ஒரே நாளில் அப்பகுதியில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

இதில், காய்ச்சல் உள்ளவர்கள் மட்டும் அரசு மருத்துவமனை மற்றும் கோவிட் கேர் சென்டரிலும் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும், காய்ச்சல் இல்லாதவர்களை வீட்டில் வசதிகள் இருப்பின் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அம்மா உணவகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அம்மா உணவகம் மூடப்பட்டது.

கோவில்பட்டியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கோவில்பட்டி நகராட்சியில் இதுவரை 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 224 பேர் குணமடைந்துள்ளனர். 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது;- சமூக இடைவெளியை பின்பற்றால் மக்கள் நெருக்கமாக இருப்பதே காரணம். அரசு தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் அலட்சியமாக இருப்பதே இதற்கு காரணம். இதனால், கோவில்பட்டி மக்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!