தூத்துக்குடியில் லிப்ட் கொடுத்தவர்களை அடித்து, உதைத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து நகை,பணம், செல் போன் மற்றும் உடமைகளை வழிப்பறி செய்யும் கும்பலை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் நாளுக்குநாள் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தனியாக செல்லும் ஆண்களிடம் லிப்ட் கேட்டு சென்று பின்னர் கத்தி போன்ற ஆயுதங்களை காண்பித்து நகை, பணம், செல், போன் ஆகியவற்றை பறித்து வருகின்றனர். மேலும் பொருட்களை தர மறுப்பவர்களை அடித்து துவைத்து அனுப்பவுது மட்டுமின்றி, அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து வெளியே சொன்னால் வீடியோவினை சமூக வளைதளங்களில் வெளியிட்டு வீடுவோம் என்ற அந்த கும்பல் மிரட்டும் சூழ்நிலை உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு இறைச்சிகடையில் பணிபுரியும் நபர் ஒருவர் வேலாயுதபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பல்க்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பிய போது 20 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் சாலையில் சென்ற பஸ்சினை காண்பித்து தனது நண்பர் அந்த பஸ்சில் செல்வதாகவும், தான் பஸ்சினை மிஸ் பண்ணிவிட்டதாகவும், அந்த பஸ்சினை பிடிக்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய அந்த இறைச்சிக்கடை ஊழியரும் அந்த இளைஞருக்கு லிப்ட் கொடுத்துள்ளார்.
இருசக்கர வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் பின்னால் அமர்ந்து இருந்த அந்த இளைஞர், இறைச்சிக்கடை ஊழியர் முதுகில் கத்தியை வைத்து, தான் சொல்லும் இடத்திற்கு வாகனத்தினை விட வேண்டும், இல்லைன்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால், வேறு வழி இல்லாமல் அந்த இளைஞர் சொன்னபடி இறைச்சிக்கடை ஊழியர் இருசக்கரவாகனத்தினை செலுத்தியுள்ளார்.
அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே சென்ற போது இருசக்கர வாகனத்தினை நிறுத்த இளைஞர் சொல்லியுள்ளார். அதன்படி இறைச்சிக்கடை ஊழியர் நிறுத்தியதும். அங்கு நின்று இருந்த 2 பேர் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்தது மட்டுமின்றி, இறைச்சிக்கடை ஊழியரை பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். கண்மாய் கரையின் ஓரத்தில் அதிகமாக இருந்த வேலி பகுதிக்கு சென்றுதும் அங்கு ஏற்கனவே 3 பேர் இருந்துள்ளனர். 6 பேரும் சேர்ந்து இறைச்சிக்கடை ஊழியர் கழுத்தில் அணிந்து இருந்து வெள்ளி செயின், அரைஞாண் கொடி, மோதிரம், செல்போன் ஆகியற்றை பறித்துகொண்டு தாக்கி உள்ளனர்.
செல்போனில் இருந்த ஜி பே, போன் பே ரகசிய எண்ணை கேட்டுள்ளனர். இறைச்சிக்கடை ஊழியர் தர மறுக்கவே 6 பேரும் சேர்ந்து இறைச்சிகடை ஊழியரை சரமாரியாக தாக்கி உள்ளனர். சிறிது நேரம் கழித்து இருச்சக்கர வாகனத்தினை மட்டும் கொடுத்து திரும்பி பார்க்கமால் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையெடுத்து இறைச்சிக்கடை ஊழியர் அங்கிருந்து தப்பி கோவில்பட்டி அரசு மருத்துவனையில் சிகிச்சைகாக சேர்ந்தார். மேலும் இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூஜை அறை முழுவதும் எழும்புக்கூடுகள், மண்டை ஓடுகள்.. பெங்களூரு பண்னை வீட்டில் பகீர் சம்பவம்..
கடந்த 7 மாதங்களில் இது போன்று 10க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், கோவில் பூசாரி, கார் மெக்கானிக், தனியார் நிறுவன ஊழியர் என பலரும் இந்த வழிப்பறி கும்பலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் இவர்களை நிர்வணமாக வீடியோ எடுத்து தாக்குதல் நடத்துகின்றனர். இதை வெளியே சொன்னால் நிர்வாண வீடியோவினை வெளியிட்டு விடுவோம் என்று வழிப்பறி கும்பல் மிரட்டுவதால் பலரும் அதற்கு பயந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க முன்வரவில்லை என்பதால் அந்த வழிப்பறியின் கும்பலில் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கோவில்பட்டி வேலாயுதபுரம் - சாத்தூர் சாலை, இலுப்பையூரணி ரெயில் சுரங்கபாலம் மற்றும் ரெயில்வே நிலையம் அருகேயுள்ள கண்மாய் பகுதியில் இந்த வழிப்பறி கும்பல் தங்களது கைவரிசையை காட்டி வருவது குறிப்படதக்கது.
இந்த பிரச்சனை குறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது அவர்கள் பதில் வேறுவிதமாக உள்ளது. கிரைண்டர் அப் என்ற செயலி ஒன்று இருப்பதாகவும், இந்த செயலி ஒரின சேர்க்கையாக்கான செயலி என்றும், இதன் செயலி மூலமாக தங்கள் விருப்பத்தினை நிறைவேற்றி கொள்ள செல்பவர்களை கும்பலாக சேர்ந்து அவர்களை தாக்குவதுடன் அவர்களிடம் இருக்கும் பொருட்களை அந்த கும்பல் பறித்து கொண்டு விடுவதாகவும், இதனை வெளியே சொன்னால் தங்களுக்கு அவமானம் என்று நினைத்து பலரும் புகார் அளிப்பது இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. ஆனாலும், இதனை தடுக்க காவல்துறை உரிய விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழிப்பறி தொடர்பாக யார் புகார் அளித்தாலும், இந்த செயலி பெயரைச் சொல்லி உங்களுக்கு அசிங்கம், உங்கள் குடும்பம் அவமானப்படும் என்று கூறி தங்களை திசை திருப்பிவிடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
லிப்ட் வழங்கி பாதிக்கப்பட்டார்களோ அல்லது செயலி மூலமாக சென்று சிக்கி கொண்டார்களோ என்றாலும் வழிப்பறி செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்று கூறும் பாதிக்கப்பட்டவர்கள், செயலி பெயரை சொல்லி காவல்துறையினர் புகார் கொடுக்க வந்தவரை திசை திருப்புவதால் இந்த குற்றம் குறைய போவதில்லை என்றும் கூறியுள்ளனர். எனவே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து வழிப்பறி செய்யும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களி கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே இறைச்சிக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் சங்கரலிங்கபுரத்தினை சேர்ந்த 15 வயது சிறுவனை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கைதுசெய்யப்பட்டுள்ள சிறுவன் மீது கஞ்சா விற்ற 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது..