தனது மகளை பறிகொடுத்த ஸ்னோலின் தாய் நெகிழ வைக்கும் வகையில் தனது மகளின் முதலாம் ஆண்டு அஞ்சலிக்கு கோரசம்பவத்தை நிகழ்த்திய காவல்துறையினர் கலந்து கொள்ள வேண்டும் என அழைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் வாயில் சுடப்பட்டு கொடூரமாக மரணத்தை தழுவினார். ஸ்னோலின். துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரில் ஸ்னோலிக்கு தான் இளம் வயது.
அந்த கொடூர சம்பவம் அரங்கேறி ஓராண்டை கடந்து விட்டது. தனது மகளை பறிகொடுத்த ஸ்னோலின் தாய் நெகிழ வைக்கும் வகையில் தனது மகளின் முதலாம் ஆண்டு அஞ்சலிக்கு கோரசம்பவத்தை நிகழ்த்திய காவல்துறையினர் கலந்து கொள்ள வேண்டும் என அழைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்னோலின் நினைவேந்தல் தூத்துக்குடி மினிசஹாயபுரத்தில் அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள சர்ச்சில் நடைபெற்றது. இது குறித்து அவரது தாயார் வனிதா ‘’இனி என் மகளுக்கு கல்யாணமா நடத்தப்போறேன். முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எல்லோரையும் அழைச்சிருக்கேன். எத்தனையோ மக்கள் என் மகளுக்காக கண்ணீர் விட்டாங்க. எளிமையாக சர்ச்சில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் வரணும். அரசு அதிகாரிங்க, போலீஸ்காரங்களையும் அழைச்சிருக்கேன். அவுங்கள மன்னிச்சிட்டேன். அன்பு மட்டும்தான் நிஜம்னு என்னோட ஸ்னோலின் சொல்லுவா. அவளுக்காக, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்,'' என நெகிழ வைத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். போராட்ட மனநிலையில் இருந்த மக்கள் அமைதியோடு வாழ தினமும் பிரார்தனை செய்துவருகிறேன். என் மகளை மேலும் படிக்கவைக்க வேண்டும், அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தரவேண்டும் என்பது மட்டும் என் இலக்காக இருந்தது. அவள் தியாக மரணம் அடைந்து விட்டதால், பிரார்தனை மட்டுமே எனக்கான வாழ்க்கையாக மாறிவிட்டது’’ என அவர் நெகிழ வைத்துள்ளார்.