கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமார். இவருடைய வீடு நாகர்கோவிலில் உள்ளது.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமார். இவருடைய வீடு நாகர்கோவிலில் உள்ளது.
துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதற்கான அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க சுப.உதயகுமார் முடிவு செய்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டார் போலீசார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கேயே அமர வைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சுப.உதயகுமாரின் மனைவி கூறுகையில், “சுப.உதயகுமார் துாத்துக்குடி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் நேற்று இரவிலேயே வீட்டுக்கு காவல் காத்தனர். கிட்டத்தட்ட சுப.உதயகுமாரை வீட்டுச் சிறையில் வைத்திருந்தனர். இன்று அவர் துாத்துக்குடி புறப்பட்டுச் செல்வார் என்பதை அறிந்தவுடன் அதிகாலை 5.30 மணியளவிலேயே அவரை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விட்டனர்” என்றார் கவலையுடன்.