ஸ்ரீவைகுண்டம் அருகே வேனும் - இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 இளைஞர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே வேனும் - இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 இளைஞர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த சாமிநாதன் என்பவர் தனது இருச்சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் சென்றுக்கொண்டிருந்தனர். அதேபோல் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வேன் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. இந்த வேன் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம், வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் திறந்துகொண்டதில், பெட்ரோல் கீழே கசிந்து தீப்பிடித்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இளைஞர்களின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் 2 இரண்டு இளைஞர்கள் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வேன் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.