நினைவு நாளிலே வழக்கை முடித்து வைத்த மனித உரிமை ஆணையம்… தூத்துக்குடி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு..!

By Asianet Tamil  |  First Published May 22, 2019, 2:44 PM IST

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில் இந்த விசாரணையை முடித்து வைப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Tap to resize

Latest Videos

.இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது தொடர்பாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்து வைத்தது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் கமிஷன் அமைத்தது போன்றவை திருப்தி அளிப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறி இருக்கிறது.

click me!