சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு உடலில் இருந்த ரத்தக்கசிவே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது என சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு உடலில் இருந்த ரத்தக்கசிவே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது என சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இதுவரை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
undefined
இந்நிலையில், முருகன், காவலர் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் தாக்கல் செய்த ஜாமீன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில்,சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புக்கு உடலில் கடுமையான காயங்கள் இருந்ததே காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயராஜ்,பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன. இதில், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60 பேரையும், சிபிஐ 35 பேரையும் விசாரித்துள்ளது. சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையாததால் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமைக்காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.