என்கவுண்டருக்கே பயப்பட மாட்டோம்; அரிவாளுடன் வீடியோ - மாணவனை தலையில் தட்டி அனுப்பிய போலீஸ்

By Velmurugan sFirst Published Sep 8, 2023, 9:57 AM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவு செய்து அலப்பறை செய்து வந்த பள்ளி மாணவனை காவல் துறையினர் கண்டித்து அனுப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் சுயசாதி பெருமை பேசும் வகையிலும், தன்னை ஒரு ரௌடி போன்று காட்டிக் கொள்ளும் வகையில் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் வசனங்களைக் கொண்டு வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.

என்கவுண்டர் என்றாலும் அசரமாட்டோம், எல்லா காவல் நிலையத்திலும் என்னைப் பற்றி கேட்டுப்பார், செத்தாலும் துப்பாக்கியால் தான் சாக வேண்டும் என்ற வசனங்களுடன் அரிவாளை கையில் வைத்தவாறு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளி வகுப்பறையிலும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலான நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் விநாயகம் பசுவந்தனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் மர்மமான முறையில் ஒருவர் காருடன் எரித்து படுகொலை - காவல்துறை விசாரணை

இதையடுத்து  காவல் துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர், அவரது பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை வழங்கியது மட்டுமின்றி இனி இது போன்ற பதிவுகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.‌ மேலும் மாணவரிடம் இருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை புத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும்: நிதின் கட்கரி

இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன், பெற்றோரின் பேச்சைக் கேட்பேன், கல்வி மட்டும் தான் தனக்கு முக்கியம் என்று எடுத்து காட்டிய பள்ளி மாணவர் காவல் நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!