கலையிழந்த நூற்றாண்டு கால பள்ளியை தத்தெடுத்து ரூ.50 லட்சத்தில் கலர்புல்லாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்

By Velmurugan s  |  First Published Sep 6, 2023, 10:22 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அருகே கலையிழந்த நிலையில் இருந்த படித்த பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள் ரூ.50 லட்சம் மதிப்பில் கலர்புல்லாக மாற்றி அசத்தியுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டு பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர். 

ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்களுக்கு தாங்கள் படித்த பள்ளியின் நிலையைக் கண்டு பெரும் மனச்சோர்வும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியின் அடிப்படை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்தனர். இதுவரை பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்களுக்குள்ளாக வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கி அனைவரும் தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை அளித்து தற்போது இந்த இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கலையின்றி காணப்பட்ட பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் வண்ணம் பூசி கலர்ஃபுல்லாக மாற்றியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

காங்கிரஸ் பிரமுகர் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை; சொத்து தகராறில் தாய், சகோதரர் வெறிசெயல்

இந்த முன்னாள் மாணவர்கள், இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் பிரமாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மேலும், நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிட்டு வந்த முன்னாள் மாணவர்கள் பள்ளியின் நிலையை கண்டு தங்களுக்குள்ளாகவே நிதியைத் திரட்டி ரூ.50 லட்சம் மதிப்பில் பள்ளியை சீரமைத்து அசத்தியுள்ளனர். அதேபோன்று வருகின்ற அக்டோபர் மாதம் 15ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பல்லாயிரக்கணக்கான முன்னாள் மாணவர்களை வருகை தர வைத்து மிகச் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

click me!