தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரையில் கடல்நீர் சாகச விளையாட்டுகள்; அமைச்சர்கள் ஆய்வு

தூத்துக்குடி  அருகே முள்ளக்காடு கடற்கரைப்பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் தொடங்கப்பட்டு வெளிநாட்டு கடற்கரைகளைப் போல் சுற்றுலா மேம்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

minister ramachandran and geetha jeevan inspects mullakadu seashore in thoothukudi district for sea games vel

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கடற்கரைப் பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் தொடங்குவது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ராமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி  முள்ளக்காடு கடற்கரைப் பகுதியை கடல்நீர் சாகச விளையாட்டுகள் அடங்கிய சுற்றுலா தலமாக ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு 1.70 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து நிபுணர்களை வைத்து எந்தெந்த சாகச விளையாட்டுகள் இங்கு கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு அதன் அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Latest Videos

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் கோவில் குடமுழுக்கு; ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கலசங்கள்

இந்த பணிகள் தாமதமாவதற்கு காரணம் கிட்டத்தட்ட 23 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது தான். தற்போது நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். விரைவில் நிலம் வாங்கப்பட்டு வருவாய்த்துறையில் இருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிர்வாகத்திடம் சமூக பொறுப்பு நிதியில் இருந்து 45.46 இலட்சம் ரூபாய் முதல் கட்டமாக பெறப்பட்டு சாகச விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. 

தனியார் மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம்; உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை

இந்த பணிகள் அடுத்த வாரம் துவங்கப்படும். மேலும், சுற்றுலாத்துறை மூலமும் தேவையான நிதி ஒதுக்கப்பட உள்ளது. மேலும், வெளிநாடுகள் மற்றும் கோவளம் போன்ற கடற்கரையைப்போல் தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரையிலும் சுற்றுலா மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டினை 2 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு உயர்த்தியுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுளார்கள். சுற்றுலாவை மேம்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கிடைப்பதுடன் அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image