அட கடவுளே.. திருமணமான 2 மாதத்தில் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் தம்பதி.. இது தான் காரணமா?

By vinoth kumar  |  First Published Dec 29, 2022, 2:55 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த தருவைகுளம் அனந்தமாடன்பச்சேரி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்க முனியசாமி (28). இவர் அப்பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வந்தார். 


தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த தருவைகுளம் அனந்தமாடன்பச்சேரி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்க முனியசாமி (28). இவர் அப்பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வந்தார். இவர் உறவுக்கார பெண்ணான சீதாலட்சுமி (22) என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

Tap to resize

Latest Videos

திருமணமான சில நாட்களிலேயே கணவர், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், விரக்தி அடைந்த தம்பதிகள் இருவருமே தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில், காலையில் நீண்ட நேரமாகியும் தங்கமுனியசாமியின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்கவில்லை, இதனையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, இருவரும் ஒரே கயிற்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதங்களில் காதல் திருமணம் செய்தத தம்பதி கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!