வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்;- வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் சென்னையில் நுங்கம்பாக்கம், வடபழனி, கிண்டி, போரூர், மதுரவாயல், வானகரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் மணல்மேடு, திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.