தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாதங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாதங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
undefined
அடுத்த 48 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 2 செ.மீ., காரைக்காலில் ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.