தூத்துக்குடியில் அரசு மருத்துவரின் அட்டூழியம்.. அரசு மருத்துவமனையில் ஊழியருடன் உல்லாசம்..!

By vinoth kumar  |  First Published Oct 26, 2021, 11:48 AM IST

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவருடன் பணிநேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் நோயாளிகள் யாரும் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக நோயாளிகள் வந்தால் அவர்களை உள்ளே விடாமல்  வெளியே நிறுத்தி வைப்பதற்காக பெண் ஊழியர் ஒருவரை வாசலில் காவலுக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.


தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பெண் ஊழியருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்தக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருவத்துவராக பணியாற்றி வருபவர் குருசாமி(51).  இவர் அதே பகுதியிலும் தனியாக ஸ்ரீ முத்தையா கிளினிக்  என்ற பெயரிலும் மருத்துவமனை நடத்தி வருகின்றார். இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவருடன் பணிநேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் நோயாளிகள் யாரும் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக நோயாளிகள் வந்தால் அவர்களை உள்ளே விடாமல்  வெளியே நிறுத்தி வைப்பதற்காக பெண் ஊழியர் ஒருவரை வாசலில் காவலுக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- 23 வயது இளைஞர் செய்யுற வேலையா இது.. ஆண்டிகள், இளம்பெண்கள் கரெக்ட் செய்து உல்லாசம்.. நிர்வாண வீடியோ..!

மேலும் பணி நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளருடன் மருத்துவர் குருசாமி நெருக்கமாக இருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பெண் மனஉளைச்சல் ஏற்பட்டு கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதில், மருத்துவரும், தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளருடன் இருப்பதை தான் பார்த்து விட்டதால் தன்னை பழிவாங்கும் விதமாக தினந்தோறும் இருவரும் உள்ளே சென்றதும், அறைக்குள் யாரும் செல்லாமல் இருக்கும் வகையில் தன்னை பாதுகாவலுக்காக வெளியே நிறுத்தி வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும், மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை தான் எடுத்துவிட்டேன் என கூறி தனது செல்போனையும் பறித்து வைத்து விட்டதாகவும், தனக்கு விடுமுறை கூட கொடுக்காமல் பல்வேறு வகையில் துன்புறுத்தி வருவதாகவும், தான் அவருக்கு அடி பணிய வேண்டும் என்று நினைப்பதாகவும் புகாரளித்துள்ளார்.

இதையும் படிங்க;-உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. பொதுமக்களிடம் வசமாக சிக்கியது.. பிறகு நடந்த தரமான சம்பவம்..!

இதனையடுத்து, அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் குருசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர் பெண் தூய்மை பணியாளருடன் உல்லாசமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!