தூத்துக்குடியில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் விளாத்திகுளம் பகுதியில் அரசு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதிவேகத்தில் வந்த கார் எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 3 பேரில் ஒருவர் வங்கி மேலாளர் ஆவார்.
உடனே விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.