தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம் !! பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை ..

By Asianet Tamil  |  First Published Aug 21, 2019, 3:10 PM IST

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
 


தூத்துக்குடி தென்பாகத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (40) . இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது .  கடந்த 2005 ம் ஆண்டு தூத்துக்குடி அருகே இருக்கும் கோரம்பள்ளத்தில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார் . இது சம்பந்தமான வழக்கில் சிவகுமார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் . இதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்திருக்கிறார் சிவகுமார் .

Tap to resize

Latest Videos

சம்பவத்தன்றும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு ஆஜராக சிவகுமார் சென்றிருக்கிறார் . அப்போது ஒரு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் சிவகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர் .  ரத்தவெள்ளத்தில் கிடந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

தகவல் அறிந்து வந்த காவல்துறை சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தது . இந்த கொலை சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது . அதை வைத்து தப்பியோடிய கொலையாளிகளை தென்பாகம் காவல்துறை தேடி வருகின்றனர் .

click me!