தாயின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லை - உடலை குப்பையில் வீசிச் சென்ற மகன்

Published : Aug 13, 2019, 12:50 PM ISTUpdated : Aug 13, 2019, 12:51 PM IST
தாயின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லை - உடலை குப்பையில் வீசிச் சென்ற மகன்

சுருக்கம்

பெற்ற தாயின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாத காரணத்தால் உடலை குப்பையில் வீசிச் சென்ற மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .


தூத்துக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி .இவரது மனைவி பெயர் வசந்தி (50 ). இவர்களுக்கு முத்துலக்ஷ்மணன் (29 ) என்கிற மகன் உள்ளார் . 
நாராயணசாமி சென்னையில் ஒரு ஆசிரமத்தில் தங்கியுள்ளார் . வசந்தி தன் மகனுடன் தூத்துகுடியில் வசித்து வந்தார் .  

இந்த நிலையில் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் வசந்தி உயிரிழந்ததாக கூறப்படுகிறது . தன்னை பத்துமாதம் சுமந்து பெற்ற தாய் என்றுகூட பாராமல் , இறுதிச் சடங்கிற்கு  பணம் இல்லை என்று கூறி அருகில் உள்ள குப்பை தொட்டியில் உடலை வீசியுள்ளார் . பெண் பிணம் ஒன்று கிடப்பதை பார்த்த துப்புரவு தொழிலாளர்கள் இதுகுறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர் .

சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த போலீசார் , அது வசந்தி எனவும் , வீசி சென்றது அவரது மகன் என்றும் தெரிய வந்தது . உடனடியாக வசந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . பின்னர் முத்துலக்ஷ்மணனிடம் அறிவுரை கூறி தாயின் பிணத்தை அடக்கம் செய்ய உதவி செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!
விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!