அரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மதரஸா- இ- இஸ்லாம் மேல்நிலை பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா மற்றும் அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகளை வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ’’அரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசிடம் எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பது முறையல்ல'' என தெரிவித்தார்.