புல் மப்பில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 3 இளைஞர்கள்.. எதிரே வந்த ரயில்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jun 10, 2022, 12:22 PM IST

தூத்துக்குடி 3வது  மைல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து (20), திரு.வி.க நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் மகன் சு.மாரிமுத்து (23), நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்தவர் குழந்தைதுரை மகன் ஜெபசிங் (23) நண்பர்களான இவர்கள் 3 பேரும் டிஎம்பி காலனியில்  நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

தூத்துக்குடி அருகே புல் மப்பில் வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 பேர் ரயிலில் அடிப்பட்டு உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததனர். 

தூத்துக்குடி 3வது  மைல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து (20), திரு.வி.க நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் மகன் சு.மாரிமுத்து (23), நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்தவர் குழந்தைதுரை மகன் ஜெபசிங் (23) நண்பர்களான இவர்கள் 3 பேரும் டிஎம்பி காலனியில்  நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Tap to resize

Latest Videos

இதனையடுத்து, 3வது மைல்  மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைகேறியதால் வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் 3 பேரும் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில், அந்த வழியே வந்த சரக்கு ரயில் ஒன்று அவர்கள் மீது ஏறி சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் மாரிமுத்து மற்றும் மற்றொரு மாரிமுத்து ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

மற்றொருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!