திருவாரூரில் மருத்துவ கல்லூரி மாணவர் பேருந்து மோதி பலி; விடுதி வசதி கோரி மாணவர்கள் முற்றுகை

By Velmurugan sFirst Published Oct 12, 2023, 11:08 AM IST
Highlights

திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், விடுதி வசதி இல்லாததே விடுதி வசதி ஏற்படுத்தி தரக்கோரி சக மாணவர்கள் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி, லில்லி தம்பதியினரின் 21 வயது மகன் அனாரியன் என்பவர் பிஎஸ்சி ஆக்சிடென்ட் அன்ட் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். அனாரியன் மருத்துவ கல்லூரிக்கு அருகில் அறை எடுத்து தங்கி படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு உணவகத்தில் சாப்பிடுவதற்காக நண்பரின் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கிக் கொண்டு அனாரியன் விளமல் பகுதிக்கு சென்று விட்டு திரும்பி மருத்துவக் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மருத்துவக் கல்லூரியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த பேருந்து இரு சக்கர வாகனம்  மோதியதில் அனாரியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரையில் மீனாட்சி அம்மன் சிலை மீது அமர்ந்து அம்மனை கொஞ்சி மகிழ்ந்த பச்சை கிளி; பக்தர்கள் பரவசம்

இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மாணவன் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக பாரா மெடிக்கல் படிக்கும் மாணவ, மாணவிகள் விடுதி வசதி இல்லை என்றும், விடுதி வசதி கேட்டு தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

சாரட்டு வண்டியில் சீர் வரிசைகளுடன் அழைத்து வரப்பட்ட தவளைகள்; மழை வேண்டி  மக்கள் வினோத வழிபாடு

விடுதி வசதி இல்லாத காரணத்தினால் தான் மாணவன் விபத்தில் உயிரிழந்து விட்டதாகக் கூறி சக மாணவ, மாணவிகள் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

click me!