ஜாலியாக இருந்து விட்டு சாதியால் கழற்றிவிட்ட காதலன் வீட்டில் தூக்கில் தொங்கிய காதலி.. கோர்ட் ஊழியருக்கு ஆயுள்.!

By vinoth kumar  |  First Published Nov 14, 2021, 7:27 PM IST

மதுரை நேதாஜி நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(34). திருவண்ணாமலை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரை சேர்ந்தவர் வினோதா(27). அதே நீதிமன்றத்தில் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்தார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.


இரண்டு ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதிமன்ற ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மதுரை நேதாஜி நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(34). திருவண்ணாமலை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரை சேர்ந்தவர் வினோதா(27). அதே நீதிமன்றத்தில் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்தார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் சென்னை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய பணியில் வினோதா சேர்ந்தார். ஆனாலும், இருவருக்கும் இடையேயான காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில்,  சுந்தர்ராஜனுக்கு வேறொரு இடத்தில் திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி திருவண்ணாமலை வானவில் நகரில் சுந்தர்ராஜன் தங்கியிருந்த வீட்டுக்கு வினோதா வந்திருந்தார். அப்போது, இருவரும் வெவ்வேறு சாதி என்பதால், வினோதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என சுந்தர்ராஜன் மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க;- அதிர்ச்சி.. தங்கை முறை பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டி படுகொலை.!

மனவேதனை அடைந்த வினோதா, சுந்தர்ராஜன் தங்கியிருந்த வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் சாதி வன்கொடுமை பிரிவுகளில் சுந்தர்ராஜன் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு  தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. 

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில்,  காதலியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக சுந்தர்ராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

click me!