கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 40 பேர் படுகாயம்.!

By vinoth kumar  |  First Published Aug 30, 2022, 10:25 AM IST

வந்தவாசி அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 45 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


வந்தவாசி அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 45 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் செல்லும் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டினார். அதேபோல் சென்னையிலிருந்து மேல்மருவத்தூர் வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை வந்தவாசியை சேர்ந்த ஓட்டுநர் அண்ணாமலை ஓட்டி வந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- இளம்பெண்ணுக்கு அந்த இடத்தில் கை வைத்து டார்ச்சர்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்! டாக்டர் மிரட்டல்

மேல்மருவத்தூர் சாலையில் கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் 2 பேருந்துகளின் முன்பக்கமும் சேதமடைந்தன. இந்த விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்கள் உட்பட 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் வந்தவாசி தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று  படுகாயமடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- சினிமா பாணியில் ரன்னிங்போதெ பயங்கர சத்தத்துடன் வெடித்த கார் டயர்! 3 பேர் ரத்த வெள்ளத்தில் பலி! 8 பேர் படுகாயம்

click me!