கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

By vinoth kumarFirst Published Aug 16, 2022, 10:05 AM IST
Highlights

கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் கடந்த 8ம் தேதி மாரியம்மன் கோவிகளுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர்.

இதையும் படிங்க;- களத்திலேயே துடிதுடித்து இறந்த கபடி வீரர் விமல்ராஜ்! குடும்பத்தாரிடம் 10 லட்சம் நிதியுதவி வழங்கினார் RK சுரேஷ்

அப்போது அதே பகுதியை சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார் (34) என்பவர் கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்ட போது திடீரென மயங்கி விழுந்ததார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆரணி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கபடி வீரர் வினோத் உயிரிழந்தார். அவருக்கு சிவகாமி என்ற மனைவியும், சந்தோஷ், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். கபடி வீரர் கரணம் அடிக்கும் காட்சி தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுததியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது களத்திலேயே கபடி வீரர் விமல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  கடலூரில் களத்திலேயே உயிரை விட்ட கபடி வீரர்.! கண்களை குளமாக்கும், பதைபதைக்க வைக்கும் காட்சி.. வைரல் வீடியோ

click me!