திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுகா சீம்பலம் அருந்ததிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ் (33). சென்னை ஓரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா அரண்வாயல் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த 6ம் தேதி பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் வெம்பாக்கத்தில் திருமணம் நடைபெற்றது.
செய்யாறு அருகே திருமணமான 9 நாட்களில் தாலியை கழற்றி வைத்துவிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுகா சீம்பலம் அருந்ததிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ் (33). சென்னை ஓரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா அரண்வாயல் கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த 6ம் தேதி பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் வெம்பாக்கத்தில் திருமணம் நடைபெற்றது.
11ம்தேதி ஜெயஸ்ரீக்கு யுவராஜ் வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் தாலி பிரித்து கோர்க்கும்' நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 2 நாட்களாக ஜெயஸ்ரீயின் பெற்றோர், உறவினர்கள் மகளுடன் இருந்தனர். அவர்கள் நேற்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று மதியம் புதுமாப்பிள்ளை யுவராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். ஜெயஸ்ரீ வீட்டில் இருந்தார். மாலையில் திடீரென ஜெயஸ்ரீயை காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது வீட்டில் ஜெயஸ்ரீ எழுதிய கடிதமும், அவர் அணிந்திருந்த தாலியும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடிதத்தில் எனது விருப்பமின்றி பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். எனக்கு வாழ பிடிக்கவில்லை என எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து கம்பெனியில் இருந்த யுவராஜ்க்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த யுவராஜ் வீடு திரும்பினார். அவரும் தனது மனைவியை பல இடங்களில் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்ப்பதிவு செய்து ஜெயஸ்ரீயை தேடி வருகின்றனர். திருமணமான 9 நாளில் புதுப்பெண் மாயமான சம்பவத்தால் இரு வீட்டாரின் குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.