Tiruvannamalai: அண்ணாமலையார் கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தி.மலை ஆட்சியர்..!

By vinoth kumar  |  First Published Jan 10, 2022, 5:52 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதோடு பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வதால், கொரோனா தொற்று அபாயம் உள்ளது. 


திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்தியிருப்பதற்கான தடுப்பூசி சான்றிதழுடன் வந்தால் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதோடு பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வதால், கொரோனா தொற்று அபாயம் உள்ளது. எனவே இன்று முதல் அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஆசிரியை மகாலட்சுமி மாலையில் பணியிடை நீக்கம்.. 6 மணி நேரத்தில் சஸ்பெண்ட் வாபஸ் பெறப்பட்ட பின்னணி..!

 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்;- திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ அதிகரித்து கொரோனா மற்றும்‌ ஒமிக்கரான்‌ நோய்‌ தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்‌ கொண்டு 10.01.2022 இன்று முதல்‌ கொரோனா தடுப்பூசி 2 தவணைகள்‌ செலுத்தியவர்கள்‌ மட்டுமே திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர்‌ திருக்கோயிலில்‌ சுவாமி தரிசினம்‌ செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்‌ எனத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இதையும் படிங்க;- அரோகரா கோஷம்... அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளிவிழும் அபூர்வ நிகழ்வு..!

சுவாமி தரிசனம்‌ செய்ய வருகை தருபவர்கள்‌ கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள்‌ செலுத்தியற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில்‌ பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால்‌ மட்டுமே திருக்கோயில்‌ வளாகத்திற்குள்‌ அனுமதிக்கப்படுவார்கள்‌. தற்போது, கோவிட்‌ நோய்‌ தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும்‌ நிலையில்‌, பக்தர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ உள்ளிட்ட அனைத்து தரப்பினரும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ நோய்‌ தொற்று பரவலை தடுக்கும்‌ இத்தகைய முயற்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ கொரோனா தொற்று அதிகளவில்‌ பரவாமல்‌ இருக்க உதவிடுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌ என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌.

click me!