ராஜசேகர் அச்சகம் வைத்திருப்பதும் அங்கு இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அங்கு தேவி ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அப்போதுதான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இருவரது குடும்பத்திற்கும் தெரியவந்ததும் அதனை கண்டித்துள்ளனர். இதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் திடீரென மாயமாகினர்.
பருவதமலை மலைமீது 2,000 அடி மலை உச்சியில் கள்ளக்காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் அருகில் பருவத மலை உள்ளது. இங்குள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். பருவதமலை 4,560 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மலையாகும். இங்கும் பவுர்ணமி காலங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.இந்நிலையில், நேற்று இரவு பருவதமலை ஏறும் வழியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று இரவு கடலாடி போலீசார் மலையேறும் குழுவினருடன் ஏரி ஆய்வு செய்தனர்.
அப்போது சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் ஆண், பெண் இருவர் தனித்தனியாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, இருவரது உடலை யும் டோலியில் கட்டி தொழிலாளர்கள் இரவு 1 மணி அளவில் கீழே கொண்டு வந்தனர். பின்னர், இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்தில் இருந்த 2 பைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், இருவரது ஆதார் அட்டைகள் மற்றும் பணம் ஆகியவை இருந்தது. அதன் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொண்ட இருவரும் சென்னையை அடுத்துள்ள மாடம்பாக்கம், பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மாடம்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜசேகர் (43) என்பதும், அவருடன் தற்கொலை செய்து கொண்ட பெண் பள்ளிக்கரணை, நாராயண புரத்தை சேர்ந்த தேவி (26) என்றும் தெரியவந்தது.
ராஜசேகர் அச்சகம் வைத்திருப்பதும் அங்கு இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அங்கு தேவி ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அப்போதுதான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இருவரது குடும்பத்திற்கும் தெரியவந்ததும் அதனை கண்டித்துள்ளனர். இதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் திடீரென மாயமாகினர்.
இதுதொடர்பாக இருவரின் குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கடலாடி போலீசார் தற்கொலை செய்துகொண்ட இருவரின் குடும்பத்துக்கும் தகவல் அளித்தனர். கள்ளக்காதல் விவகாரத்தால் பருவதமலை மலைமீது இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.