திருவண்ணாமலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களின் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசியை அதிமுகவினர் விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களின் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசியை அதிமுகவினர் விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், 2-ம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
undefined
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட போளூர், கலசபாக்கம், செங்கம், சேத்துப்பட்டு, புதுப்பாளையம், ஜவ்வாதுமலை, ஆரணி உள்ளிட்ட 9 ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் மைத்துனர் தீபாசம்பத் சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
இவரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கவுரி ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தர்மன் ஆகிய மூன்று அதிமுக வேட்பாளர்களும் இணைந்து, அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு வரும் பொதுமக்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரகுநாதபுரம் அரிசி ஆலையில் 25 கிலோ அரிசி மூட்டையை வழங்கினர். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து எஸ்.பி. தலைமையில் போலீசார் அரிசி ஆலைக்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் அரிசி ஆலையை மூடிவிட்டு அங்கிருந்தவர்கள் ஓடி விட்டனர். தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.