கைலாச நாட்டுக்கு 40 லட்சம் பேர் விண்ணப்பமாம்..! குஷியில் குதிக்கும் நித்தியானந்தா..!

By Manikandan S R SFirst Published Dec 17, 2019, 10:21 AM IST
Highlights

தான் உருவாக்க இருக்கும் கைலாசா நாட்டில் குடிமக்கள் ஆகுவதற்கு உலகெங்கிலும் இருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தால் தனக்கு மேலும் அடி விழும் என்று நினைத்த நிலையில் அதற்கு ஆதரவு பெருகி வருகிறது என்றார்.

தமிழ்நாட்டில் இருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்த சாமியார் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் அமைத்து உள்ளார். பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும் இவரிடம் பல இளம்பெண்கள் சீடர்களாக இருக்கிறார்கள். இவர் மீது பாலியல் தொல்லை, இளம்பெண்கள் கடத்தல் போன்ற  குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் எங்கோ தலைமறைவாக இருந்துகொண்டு அவ்வப்போது சில காணொளிகளை வெளியிட்டு நித்யானந்தா சர்சைககளுக்கு வித்திட்டு வருகிறார்.

இதனிடையே தற்போது மீண்டும் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். தான் உருவாக்க இருக்கும் கைலாசா நாட்டில் குடிமக்கள் ஆகுவதற்கு உலகெங்கிலும் இருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தால் தனக்கு மேலும் அடி விழும் என்று நினைத்த நிலையில் அதற்கு ஆதரவு பெருகி வருகிறது என்றார். முன்பு நாட்டில் எதாவது பிரச்சனை நிகழ்ந்தால் அதை திசை திருப்புவதற்காக நித்தியானந்தா பற்றிய செய்திகளை பரப்பி விடுவார்கள் என்றும், ஆனால் தற்போது பிரச்சனை இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரம் முழுவதும் தம்மை பற்றிய செய்திகளையே போடுவதாக பேசியிருக்கிறார்.

தன்னை பற்றி கேலி செய்து வெளியிடப்படும் மீம்ஸ் குறித்து தான் கவலைப்பட வில்லை என்ற நித்தியானந்தா மீம்ஸ் போடும் மாம்ஸ் அனைவரும் தன்னை போல ஜாலியாக இருக்கட்டும் என்றார். மேலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் டா என்கிற வின்னர் பட நகைச்சுவை நடிகர் வடிவேல் போல தனது நிலை ஆகிவிட்டதாக வருத்தத்தோடு நித்தியானந்த சாமியார் காணொளியில் பேசியிருக்கிறார். 

click me!