கார்த்திகை தீபத் திருவிழா! மலை மீது ஏற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி.. என்னென்ன கட்டுப்பாடுகள்.. முழு விவரம்.!

By vinoth kumarFirst Published Dec 2, 2022, 12:37 PM IST
Highlights

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 6-ம் தேதி பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்பட்டப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி 2,500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கற்பூரம் உள்ளிட்ட தீ பிடிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 6-ம் தேதி பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்பட்டப்படுகிறது. இந்த விழாவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க;- எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.. 2 ஆண்டுகளுக்கு பின் திருவண்ணாமலையில் இன்று மாட வீதியில் தேரோட்டம்..!

இந்நிலையில், மகா தீபத் திருவிழாவின் போது பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுவார்கள் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி மலைமீது ஏற 2,500 பேருக்கு காலை 6 மணிக்கு செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். 

பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. மலையேறுபவர்கள் தங்களுடைய அடைளாய அட்டையை காண்பித்தால் அனுமதிசீட்டு வழங்கப்படும். கற்பூரம் உள்ளிட்ட தீ பிடிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையேறுபவர்கள் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். திரும்பி வரும்போது தண்ணீர் பாட்டிலை கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை..? குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயம்..? கூட்டுறவுத்துறை உத்தரவு

click me!