உலக பிரசித்தி பெற்ற கோவிலும், பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீபத்திருவிழா வெள்ளி தேரோட்டம் இன்று முதல் தொடங்க உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற கோவிலும், பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் என்றாலே திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். இந்நிலையில், விழாவின் 5வது நாளான நேற்று சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் 6வது நாளான இன்று வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது. மற்றொரு முக்கிய நிகழ்வான நாளை விநாயகர், முருகன், மகா ரதம் தேரோட்டம் நடைபெறுகிறது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது.
2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேரான மகா ரதம் இழுக்கப்படும். இதில், ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். மகா தேரோட்டம் சுமார் 16 மணி நேரம் தொடர்ச்சியாக இரவு வரை நடைபெறும் என்பது குறிப்பித்தக்கது.