பேனர்களால் மக்களுக்கு அசம்பாவிதம் நேர்ந்தால்..... மாவட்ட ஆட்சியர் பகிரங்க எச்சரிக்கை

By Dinesh TG  |  First Published Oct 3, 2022, 8:21 PM IST

பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்கள், விளம்பரப் பதாகைகளால் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 


திருவண்ணாமலை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்கள், விளம்பர பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் வைப்பதால் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதால் நகரின் அழகு தன்மை பாதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா முருகேஷ் தலைமையில் பேனர், போஸ்டர், விளம்பர பதாகைகள், உள்ளிட்டவைகளை வரன்முறைப்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேனர் வைப்பதற்கான வரன்முறை குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Latest Videos

குழந்தை பிறந்து 10 நாட்களில் பணிக்கு திரும்பிய தாம்பரம் மேயர் - பொதுமக்கள் நெகிழ்ச்சி

இதில் பேசிய  மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் அனுமதியின்றி பேனர் வைத்து அதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் உயிர் சேதம் உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகளால் பொறுப்பேற்க வேண்டும். விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாற்றப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

பரோட்டா சாப்பிடும் போட்டி; சூரிக்கே டஃப் கொடுத்த அரியலூர் இளைஞர்கள்

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் திருவண்ணாமலை நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து பேனர் மற்றும் போஸ்டர்களை அகற்ற வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பேனர் மற்றும் போஸ்டர்களை வைத்து சாலை ஓரங்களில் அசுத்தபடுத்தி உள்ளதாகவும், பேனர்கள் வைத்து சாலையை மறைத்து விடுவதாகவும் இதனை நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் வேதனை தெரிவித்தார்.

 

click me!